“நம்பி வந்தோம்.. இப்படி மோசம் பண்ணிட்டீங்களே?”…. தவெகவில் வெடித்த உள்வீட்டுப் பூசல்.. விரைவில் அதிமுக ‘மாஜிக்கள்’ விலகல்?… ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆவணி 29, 2026

Spread the love

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய நிர்வாகிகளிடையே தற்போது கடும் அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. “கட்சிப் பதவி, எதிர்காலத்தில் வாரியப் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி எங்களை அழைத்து வந்தனர்; ஆனால், தற்போது எங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு மட்டுமே தலைமை அதிக முக்கியத்துவம் அளிக்கிறது” என அதிமுக ‘மாஜிக்கள்’ தங்கள் புலம்பலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ள இந்த மூத்த நிர்வாகிகள் பலர், தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கருதி விரைவில் தவெகவில் இருந்து விலகி தாய் கழத்திற்கோ அல்லது வேறு கட்சிகளுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.