BREAKING: இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இவர்களுக்கு கிடைக்காது… காலையிலேயே ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.1,000 நிதியுதவி இன்று முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ள நிலையில், வங்கி சார்ந்த சில தொழில்நுட்பச் சிக்கல்களால் நிதி வரவு தடையபட வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத செயலற்ற (Inactive) வங்கிக் கணக்குகள் மற்றும் கேஒய்சி (KYC) புதுப்பிக்கப்படாத கணக்குகளுக்கு அரசு அனுப்பும் நிதி சென்றடையாது.

மேலும், குடும்ப அட்டை (Ration Card) மற்றும் வங்கிக் கணக்கில் உள்ள பயனாளி விவரங்களில் சிறு வேறுபாடுகள் இருந்தாலும் இத்தொகை வரவு வைக்கப்படமாட்டாது. எனவே, மகளிர் உரிமைத்தொகை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகக் கிடைக்க, தங்களின் வங்கிக் கணக்கில் KYC விவரங்கள் சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என்பதையும் பயனாளிகள் உடனடியாக உறுதிசெய்து கொள்வது அவசியம்.