பொதுவாகவே பெரும்பாலானோர் வீடுகளில் எலி தொல்லை என்பது அதிகமாகவே இருக்கும். காலநிலை மாற்றத்தின் போது எலிகள் மற்றும் பூச்சிகளின் தொல்லை வீட்டில் தாங்க முடியாது. அந்த நேரத்தில் எலிகளை எப்படி விரட்டலாம் என நாம் யோசிப்போம். இதுபோன்ற உயிரினங்கள் வீட்டில் நோய் தொற்று, பொருள் சேதம் மற்றும் உணவுகளை சேதப்படுத்தும். இதனால் எலிகளை நிரந்தரமாக வெளியேற்றவும் உங்களிடத்தை பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும் இந்த முறையை பின்பற்றுங்கள். எலி தொல்லையை குறைக்க எலி பொறிகள் மற்றும் இயற்கை தடுப்புகளை பயன்படுத்தலாம். குறும்புத்தனத்திற்காகவே பிறந்த எலியை விரட்ட விலை உயர்ந்த ரசாயனங்களோ அல்லது எலி விஷங்களோ தேவையில்லை.
மாறாக நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தலாம். ஒரு வீட்டில் எலி இருந்தால் அதன் எச்சங்கள் சிறியதாகவும் கருமையாகவும் இருக்கும். அதனை நம்முடைய அலமாரிகள் மற்றும் உபகரணங்களுக்கு பின்னால் அல்லது இருண்ட மூலைகள் போன்ற இடங்களில் காண முடியும். இந்த எலி எச்சங்கள் தொற்றின் அளவின் தீவிரத்தை குறிக்கும். குழந்தைகள் இருக்கும் வீடாக இருந்தால் தொற்றுகள் அதிகமாகும். எலிகள் இரவு நேரத்தில் சுறுசுறுப்பாக இருப்பதால் பல பொருட்களை சேதப்படுத்தி விடும். குறிப்பாக தூசி நிறைந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும். வழக்கமாக எலிகள் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கடித்து வைப்பது அதிகம்.
