உடனே இத பாருங்க..! அதிரடி மாற்றம்… இனி இந்த கலர் தானா?… டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அதிரடி திருப்பம்… மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!

By Gayathri on ஐப்பசி 24, 2026

Spread the love

இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும் தனித்தனி வண்ணங்களில் அட்டைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதியதாக வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் உரிமங்கள் அனைத்தும் லேமினேட் செய்யப்பட்ட அல்லது பிவிசி அட்டை வடிவில் வழங்கப்படுவதுடன், அதில் சம்பந்தப்பட்ட நபரின் தேசிய இனக் குறிப்பும் தெளிவாகக் குறிப்பிடப்படும்.

விபத்து அல்லது அவசர காலங்களில் உடனடி உதவி கிடைப்பதை உறுதி செய்ய, ஓட்டுநரின் ரத்த வகை, தொலைபேசி எண் மற்றும் அவசர காலத் தொடர்பு எண்கள் அட்டை வடிவில் இடம்பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. அத்துடன், முகவரி மற்றும் வயதுக்கான சான்றாக இதுவரை நடைமுறையில் இருந்த நோட்டரி பிரமாணப் பத்திரங்கள் மற்றும் எல்ஐசி பாலிசி ஆவணங்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்றும், அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஆன்லைன் வழியிலான ஓட்டுநர் பாதுகாப்புப் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆதார் சரிபார்ப்பு மூலம் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யும் நடைமுறைகள் கட்டணமின்றி வழங்கப்படும் என்றும், விண்ணப்பங்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில் அவை தானாகவே ஒப்புதல் பெற்றதாகக் கருதப்படும் என்றும் வரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.