actor Vijay

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் மூவி… ரி ரிலீஸ் என வெளியான அறிவிப்பு – இந்த முறையாவது தியேட்டருக்கு வருமா?

By Elango on மாசி 18, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்த படங்களில் இயக்குனர் அட்லி இயக்கிய தெறி மெர்சல் பிகில் ஆகிய 3 படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன. அதிலும் தெறி படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் விஜய் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படத்தில் இரட்டை நாயகிகளாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளிவராத நிலையில் தெறி படம் ஜனவரி 15ம் தேதி ரி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. புதிய படங்கள் ரிலீஸ் காரணமாக பிறகு ஜனவரி 23ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பிறகு அந்த நாளிலும் ரி ரிலீஸ் செய்யப்படவில்லை. அதன்பிறகு தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் இப்போது வருகிற 27ம் தேதி தெறி படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு அதிகாரபூர்வமாக தனது வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.