தமிழகத்தில் 4 முனைப்போட்டி இல்லை 5 முனைப்போட்டி… புது அவதாரம் எடுக்கும் சசிகலா… ஆதரவாளர்களோடு மெகா பிளான்..!!

By Soundarya on மாசி 8, 2026

Spread the love

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஆதரவாளர்களைத் தனித்துக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, சசிகலாவால் 2027-ஆம் ஆண்டு வரை தேர்தலில் நேரடியாகப் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்தவும், அதிமுகவில் தனது ஆதரவுத் தளத்தைக் காட்டவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக, திருத்தணி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கியத் தொகுதிகளைக் குறிவைத்து சசிகலா காய்களை நகர்த்தி வருகிறார். தனது ஆதரவாளர்களை இத்தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்துள்ள அவர், அதற்காகத் தனது அணியின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் நிலையில், திமுக+, அதிமுக+, நாம் தமிழர் கட்சி (நாதக), மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசியலில் தனித்துப் போட்டியிட்டால் ஏற்படும் தாக்கம் குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் அவர் தனது அணியினரிடம் கேட்டறிந்து வருகிறாராம்.