“தளபதி Mode ON…” ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விழுந்த சாட்டையடி… ஒரே ஒரு விசிட்… மொத்தமாக மாறிய சீனியர் அதிகாரிகள்… கோட்டையை உலுக்கிய அந்த 2 நிமிட உத்தரவு…!

By Visaka on ஆடி 18, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் ஆட்சி நிர்வாகத்திற்குப் புதியவர்கள் என்பதால், கடந்த காலங்களைப் போலவே தற்போதும் சில மூத்த அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், அமைச்சர்களின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளே, “ஒரே பவர் சென்டர்” தான் மட்டுமே என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், நிர்வாகத்தில் அதிகாரிகளின் ஆதிக்கம் தலைதூக்குவதை அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக, தமிழ்நாட்டின் மிக முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத அதிகாரிகளாகக் கருதப்பட்ட ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹு, உமாநாத், பாஸ்கர பாண்டியன் மற்றும் பூஜா குல்கர்னி உள்ளிட்ட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இவர்கள் அனைவரும் எவ்வித முக்கியத்துவமும் இல்லாத சாதாரண (டம்மி) பொறுப்புகளுக்கு முதலமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். வியாசர்பாடி பேருந்து முனைய ஆய்வின் போது முறையாகப் பதிலளிக்காதது மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நில விவகார விசாரணைக்கு ஒத்துழைக்காதது போன்ற காரணங்களால் இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாணியில், நிர்வாகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்ற கடுமையான எச்சரிக்கையை இந்த இடமாற்றம் மூலம் முதலமைச்சர் விஜய் உணர்த்தியுள்ளார். மூத்த அதிகாரிகள் மீதான இந்த திடீர் அதிரடி நடவடிக்கை, அரசு இயந்திரத்தில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கு மத்தியில் பெரும் திக்.. திக்.. மனநிலையை உருவாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் அமைச்சர்களின் உத்தரவுகளுக்கு மதிப்பளித்து, தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்த்தால் மட்டுமே தப்பிக்க முடியும் என்ற அச்சமும், எச்சரிக்கையும் தற்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.