விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருவதால், படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி இப்படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தணிக்கைக்குழு சுட்டிக்காட்டிய மாற்றங்களை மேற்கொண்டு படக்குழுவினர் இரண்டாவது முறையாகப் படத்தை சமர்ப்பித்தனர். இருப்பினும், இன்று வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ள நிலையில், இந்தத் தாமதம் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
