சென்னை, மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து கொண்டு வருகிறார்கள். ரயில் பயணத்தில் நிறைய விதிமுறைகள் இருக்கிறது நிறைய பேருக்கு இது போன்ற விதிமுறைகள் தெரியவில்லை. சில பயணத்தின் போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என புகார்கள் வருகிறது. மற்றொருவரை அச்சுறுத்துவது போன்ற செயலும், மன உளைச்சல் ஏற்படும் வகையிலும் நடந்துக்க கூடாது என்று பயணிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது ரயில்வே நிறுவனம்.
ரயில் பயணத்தின் போது பயணிகள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பது பொருட்களை வைப்பதே இது போன்ற அசுத்தமான மற்றும் அடுத்தவர்களுக்கு தொல்லை படும் வகையில் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. சில குடும்பத்தாருக்கு இருக்கை பிடித்து வைக்கும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் முன்கூட்டியே வரும் பயணிகளுக்கு கூட இருக்கை கிடைப்பதில்லை. அதேபோல் இருக்கைகளில் அமராமல் பெட்டி நுழைவு வாயில் அமர்ந்து கொண்டு பயணிகளுக்கு இடையூறாக இருப்பதும் தவறு. ஓடும் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் விபத்துக்கு உள்ளாகும். அதேபோல் உறவினர்களுக்காக இடம் பிடித்து வைப்பது தவறு. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. இருக்கைகள் மீது காலை வைத்தால் தண்டனை கட்டாயம். ரயில் பயணத்தின் போது ஏதேனும் இடையூறுகள் இருந்தால் புகார் அளியுங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
