பழைய பங்களாவில் இருப்பது பேய்கள் இல்லையா..? பகீர் கிளப்பும் கனடா ஆராய்ச்சியாளர்கள்… மனித மூளையை மிரட்டும் மர்மம்..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களுக்குச் செல்லும்போது பலருக்கு ஏற்படும் இனம்புரியாத பயம் மற்றும் பதற்றத்திற்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் ‘பேய்கள்’ அல்ல, மாறாக ‘இன்பிராசவுண்ட்’ (Infrasound) எனப்படும் அதிர்வெண் குறைந்த ஒலிகளே என்று கனடா ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். மனிதக் காதுகளால் கேட்க முடியாத 20 Hertz-க்கும் குறைவான இந்த ஒலிகள், பழைய கட்டிடங்களில் உள்ள துருப்பிடித்த குழாய்கள், காற்றோட்ட வசதிகள் மற்றும் இயந்திரங்கள் மூலமாக உருவாகின்றன.

இந்த குறைந்த அதிர்வெண் ஒலிகள் மனித உடலில் ஊடுருவும்போது, அது ‘கார்டிசோல்’ (Cortisol) எனும் ஹார்மோன் சுரப்பைத் தூண்டி அதை அதிகரிக்கிறது. இதன் விளைவாக, எந்தவொரு காரணமும் இல்லாமலேயே மனிதர்களுக்கு எரிச்சல், சோகம் மற்றும் தீவிரமான பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பாழடைந்த இடங்களில் நாம் உணரும் ஒருவித அமானுஷ்ய உணர்வுகளுக்கு நம் உடலியல் மாற்றங்களே அடிப்படை காரணமாக அமைகின்றன.