சக போட்டியாளரை தாக்கியதால் பிக் பாஸ் பிரபலம் திடீர் கைது… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

By Begam on மார்கழி 21, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது.  தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்றே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பட்டு வருகிறது.

   

தமிழில் தற்போது நடைபெறும் பிக் பாஸ் சீசன் 7 போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.  இந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின்  இறுதிப் போட்டியாளர்களாக பல்லவி பிரசாத் மற்றும் அமர்தீப் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

   

#image_title

 

இவர்களில் பல்லவி பிரசாத் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருந்தது . தெலுங்கானாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்தவர் பல்லவி பிரசாத். இவர் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது அன்றாட வாழ்க்கை, விவசாய வேலைகளை பற்றி அதிகம் வீடியோக்களை பகிர்ந்து, சோசியல் மீடியாவில் பிரபலமான இவருக்கு  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகு பல்லவி பிரஷாந்த் ரசிகர்கள் அதிகம் கூடி பேரணியாக சென்று இருக்கின்றனர். அப்போது அவர்கள் சில வாகனங்களையும், பேருந்துகளையும் தாக்கி சேதப்படுத்தி இருக்கின்றனர். இதில் அமர்தீப் சவுத்ரியின் காரின் மீது பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் பலரும் கடும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சில ரசிகர்களையும் வீடியோ ஆதாரத்தின் மூலம் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று போலீசார்  பல்லவி பிரஷாந்தை கைது செய்திருக்கின்றனர். இத்தகவல் தற்பொழுது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.