இந்த வாரம் திரையரங்கு மற்றும் OTT-ல் ரிலீஸ் ஆகும் முன்னணி நடிகர்களின் படங்கள்.. என்னென்ன தெரியுமா..?

By admin on ஆவணி 6, 2024

Spread the love

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ்காக காத்திருக்கும் படங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அந்தகன்:
டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தில் ஹீரோவாக மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தை பிரசாந்தின் தந்தையும் பிரபல இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் பிரியா ஆனந்த், வனிதா, சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தியில் ரிலீஸ் ஆகி பிளாக் பஸ்டரான படம் அந்தாதூண். இந்த படத்தை தான் தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள அந்தகன் படம் வருகிற ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

   

அந்தகன் படத்தோட ஸ்பெஷலே அதுதானாம்... அப்பாவைப் பற்றி அப்படி சொன்ன பிரசாந்த்  | what is the special matter in andhagan movie?

   

மின்மினி:
மின்மினி திரைப்படத்தை ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்தர் அணில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹலீதா சமயம் ஏற்கனவே சில்லு கருப்பட்டி, பூவரசன் பீப்பீ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்த நிலையில் மின்மினி திரைப்படத்தின் மூலம் ஏ.ஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக உள்ளார். இந்த படமும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

ஆக. 9ந் தேதி வெளியாகும் மின்மினி படம்

வீராயி மக்கள்:
விரகி மக்கள் திரைப்படத்தில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ளார். வேலராமமூர்த்தியும், மாரிமுத்துவும் அண்ணன் தம்பியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். நாகராஜ் கருப்பையா இயக்கிய படத்தை ஏ வைட் ஸ்கிரீன் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ரமா, ஜெரால்டு மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் வருகிற வருகிற ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது.

வீராயி மக்கள் திரைப்பட இசை வெளியீட்டு விழா !! – NBA 24X7

ஓடிடி ரிலீஸ் படங்கள்:
சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்தியன் 2 படம் தான் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஒன்பதாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதேபோல மலையாளத்தில் மம்முட்டி நடித்த டர்போ சோனி லிவ் தளத்திலும், நந்தனா சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்திலும், ஹிந்தியில் லைப் ஹில் கயிபடம் ஹாட்ஸ்டாரிலும் ரிலீஸ் ஆகிறது.

ஓடிடியில் இந்தியன் - 2 எப்போது?