எனக்கு அவன் தான் வேணும்… காதலனுக்காக பெற்றோரை உதறிவிட்டுச் சென்ற இளம் பெண்.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்…!

By Srimathi on ஆவணி 31, 2025

Spread the love

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. அவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் ஷ்ரத்தா வீட்டிற்கு தெரிய வர அவர்கள் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பவத்தன்று ஷ்ரத்தா, தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தியும், “நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன்” என்று கூறியுள்ளார். பெற்றோரை உதறி விட்டு வெளியேறிய ஷ்ரத்தா, ரயில் நிலையத்திற்கு வந்தார். நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பிறகு தனது காதலனுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவரது காதலன் அழைப்பை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரது காதலனிடம் இருந்து கால் வந்தது, “எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை” என அவர் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

   

காதலனை நம்பி பெற்றோரை உதறிவிட்டு வந்த ஷ்ரத்தா அழுது கொண்டே அங்கு வந்த ரயிலில் ஏறினார். அந்த போட்டியில் ஷ்ரத்தாவின் கல்லூரி நண்பர் கரண் என்பவர் இருந்தார். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தாவை, “ஏன் இப்படி அழுகிறாய்” என்று கரன் கேள்வி எழுப்பினார். பின் நடந்ததை கூறிய ஷ்ரத்தா மேலும் மேலும் அழுதார். கரண் அவரை சமாதானப்படுத்த முயற்சித்த போதும், எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண், “நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறினார். மேலும் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

   

திருமணத்திற்கு பின் இருவரும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம் பெண்ணின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஷ்ரத்தாவின் தந்தை, தனது மகளை 10 நாட்கள் கணவரிடமிருந்து பிரித்து வீட்டில் வைத்து அனுப்புவதாக கூறினார். மேலும் 10 நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் விரும்பினால், இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன், என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு தம்பதியினர் சம்மதம் தெரிவித்து ஷ்ரத்தா தனது பெற்றோருடன் சென்றார்.