கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், அம்ருதஹள்ளியைச் சேர்ந்த ராஜ் என்ற திருடன், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இந்நிலையில், ஒருநாள் இரவு மண்டூரில் தான் ஏற்கனவே நோட்டமிட்டிருந்த ஒரு வீட்டிற்குச் சென்று, அங்கிருந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 ரொக்கம் ஆகியவற்றைத் திருடினான்.
திருடிய நகைகளுடன் ஆள் நடமாட்டம் இல்லாத சுடுகாடு பகுதிக்கு வந்தபோது, அங்கே திடீரென 4 இளைஞர்கள் கொண்ட கும்பல் ராஜை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அந்த இளைஞர்கள் ராஜை சோதனையிட்டு, அவனிடம் இருந்த தங்கம் மற்றும் பணத்தைக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் பறித்துக்கொண்டனர்.
தான் ஒரு திருடன் என்று ராஜ் சொன்னபோதும், அந்தக் கும்பல் அவனுக்குச் செலவுக்கு ரூ.3,000 மட்டும் கொடுத்து அனுப்பிவைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ், அங்கிருந்த மேலும் 2 வீடுகளில் புகுந்து 120 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடினான்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டு உரிமையாளர்கள் புகார் அளித்ததன் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ராஜைக் கைது செய்தனர். அவனிடமிருந்து 110 கிராம் தங்கம் மற்றும் ரூ.28,000 ரொக்கத்தைக் கைப்பற்றினர். ராஜிடம் திருடிய ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…