“கல்யாணம் பண்ணு இல்ல காசு குடு…!” வற்புறுத்திய காதலி.. கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன்… பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on தை 13, 2026

Spread the love

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், சமூக வலைதளம் மூலம் பழகிய தர்மபுரியைச் சேர்ந்த சாலா என்ற பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். ஏற்காட்டிற்குச் சுற்றுலா சென்ற இருவரும் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியோ அல்லது பெரும் தொகையை நஷ்டஈடாகத் தரும்படியோ பார்த்திபனை சாலா வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த பார்த்திபன் சாலாவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த கையோடு ஊருக்குத் தப்பிச் சென்ற பார்த்திபன், தனது வழக்கறிஞரிடம் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசாரிடம் சரணடைந்தார். விடுதி அறையில் அரைகுறை ஆடையுடன் மீட்கப்பட்ட சாலாவின் உடலை மீட்ட போலீசார், பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தினர். அடிக்கடி பணம் கேட்டுத் தொல்லை கொடுத்ததாலும், குடும்ப வாழ்க்கையில் தலையிட முயன்றதாலும் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.