ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நடிகை… புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு… குவியும் வாழ்த்துக்கள்…

By Begam on தை 29, 2023

Spread the love

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று ‘யாரடி நீ மோகினி’.  இந்த சீரியலில் கதாநாயகியாக வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியலில் நடிகை நக்ஷத்திரா தனது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தார்.

   

இதை தொடர்ந்து அவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். விரைவில் அவர் புதிய சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்னால் விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை நக்ஷத்ரா.

   

 

தற்பொழுது இவர் தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது இவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தோடு பதிவு செய்துள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள்  நடிகை நக்ஷத்ராவிற்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வைரலாகும் அந்த பதிவு இதோ….