நடிகர் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் பணிகள் இன்று முதல் துவங்குகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மகில் திருமேனி இயக்குகிறார். இந்நிலையில் அர்பைஜான் நாட்டில் ஆக்சன் காட்சிகளுடன் விடாமுயற்சி படபிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ஹுமா குரேஷி, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படபிடிப்பிற்காக அஜித் உள்பட பட குழுவினர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த தலைப்பு மட்டுமே வெளியானது. அதன் பிறகு படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

விடாமுயற்சி படத்தின் அப்டேட் அடுத்து எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், பட குழுவினர் அதற்கான வேலைகளை ஆரம்பித்ததை அறிந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தொடர்ந்து மூன்று மாதங்கள் அங்கு படபிடிப்பு நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. முக்கியமான கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியான நிலையில் மற்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

