தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் புதுச்சேரியிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான குடும்ப தலைவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி மகளிர் உரிமைத்தொகை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சற்று முன் அறிவித்துள்ளார்.
தற்போது அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் அவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகையானது வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி அல்லது பொங்கலுக்கு பிறகு 2500 ரூபாயாக வழங்கப்படும் என உறுதிப்பட அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
