திருவாரூர் அருகே திருநாட்டியாத்தங்குடியை சேர்ந்த மாங்கனி(39), கணவர் கலியபெருமாள் கார் டிரைவர். மாங்கனி தினமுமே வீட்டிற்கு எதிரே உள்ள வெள்ளையாற்றின் தடுப்பணையில் குளிப்பது வழக்கம். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கலிய பெருமாளின் மகன் கவியரசன் (11), சிவசுப்பிரமணியனின் மகன் ஹேம்சரண்(10) சிறுவர்களும் குளிப்பதற்காக ஆற்றிற்கு வந்துள்ளனர். கவியரசன் நிலை தடுமாறி திடீரென்று ஆற்றில் விழுந்து விட்டார். பின்பு ஹேம்சரணின் கையை பிடித்துள்ளார். அவரும் தடுமாறி ஆற்றிலே விழ தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாங்கனி விரைந்து சென்று இருவரையும் காப்பாற்ற முயற்சித்துள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் இருவரையும் கரைத்துக் கொண்டு வர கஷ்டமாக இருந்துள்ளது.
தன் உயிரைப் பொருட்படுத்தாமல் இருவரையுமே கரைக்கு இழுத்து சென்று கூச்சலிட்டுள்ளார் . சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டு கரைக்கு மேல் கொண்டு வந்துள்ளனர். கவியரசன் ஆற்றின் நீரை குடித்து மயங்கி விட்டார். உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்து கவியரசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்குப் பின்பு கவியரசன் நலமாக உள்ளார். மாங்கனி செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் பாராட்டி தள்ளி வருகிறார்கள். அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அவருடைய எக்ஸ் தலத்தில் மாங்கனி அவர்களை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர்கள் என்றாலே அனைவருக்கும் ஓடி ஓடி உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்கள். இப்பெண்ணின் இயல்பை மற்றும் தைரியத்தை பாராட்டுகிறேன் என்று கூறி சகோதரி மாங்கனிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…