மகனே வேண்டாம் என தூக்கி எறிந்த விஜயா… முத்துவின் எமோஷனலான பிளாஷ்பேக்.. சிறகடிக்க ஆசை சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம்…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல். விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது, ரீசன்டாக தகவல் வெளியாகி இருந்தது. குடும்ப கதைகளத்தோடு ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் இந்த சீரியலில் தற்போது முத்துவின் ஃப்ளாஷ்பேக் ஒளிபரப்பாக போகிறதாம். கடந்த சில நாட்களாகவே கிரிஷ் என்ற சிறுவனின் கதை தான் போய்க்கொண்டு இருக்கிறது. கிரிஷுக்கு பின்னாடி உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். வீட்டுக்குள்ளேயே கிரிஷ் அம்மாவை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள். கிரிஷ்க்கு பின்னாடி உள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விட்டால் என்ன நடக்கும். ரோகிணி நிலைமை? எல்லாத் தவறையும் செய்து கொண்டு முத்துவையும் மீனாவையும் கரிச்சி கொட்டிக் கொண்டு இருக்கும் ரோகிணி. ரோகினியின் உண்மை முகம் வெளியே வந்தால் விஜயா என்ன செய்வார்?

இந்த அனைத்து கேள்விகளுக்கும் போக போக தான் பதில் கிடைக்கும். கிரிஷ் செய்த தவறுக்காக முத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். எந்த இடத்திலையுமே தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர் கிரிஷ்காக  விட்டுக் கொடுத்துட்டாரு. நாளைக்கான ப்ரோமோ வெளிவந்தது. அதில் கிரிஷ் சீர்திருத்த பள்ளிக்கு போக வேண்டும் என்று மனோஜ் கூறினார். முத்து அதெல்லாம் முடியாது என்று பதில் சொன்னார். உன்ன மாதிரி அவனும் சீர்திருத்த பள்ளிக்கு போனா தான் கொஞ்சம்  மாறுவான் அப்படின்னு மனோஜ் திமிராக பேசினார். கோபத்தின் உச்சிக்குப் போன முத்து மனோஜின் சட்டையை பிடித்துக் கொண்டு நான் ரவுடியாடா? நானாடா ரவுடி? என்று கேட்டுக்கொண்டே அடிக்க போனார். மனோஜ் எதையும் பேசவில்லை.

மீனா முத்துவிடம் நீங்க எதுக்கு சீர்திருத்த பள்ளிக்கு போனீங்க? என்று கேட்டார். முத்துவின் ஃப்ளாஷ்பேக், இந்த வாரத்திற்கான ப்ரோமோ. முத்து சிறுவயதில் இருக்கும் போது ஏதோ ஒரு காரணத்துக்காக விஜயா சாமியாரை பார்க்க போயிருக்காங்க. அந்த சாமியார் உங்களோட இரண்டாவது பையன் உங்க கூட இருந்தா உங்களோட உயிருக்கே ஆபத்து அப்படின்னு சொல்லி இருக்காரு. பயத்துல விஜயா அவரோட மாமியார் கிட்ட கொஞ்ச நாளைக்கு முத்துவ பாத்துக்கோங்க அப்படின்னு அழுது இருக்காங்க. முத்து அம்மா என்ன விட்டு போகாதீங்க அப்படின்னு கைய புடிச்சிட்டு கதறாரு. மனோஜ் செய்த தவறுக்கு முத்து பழியை ஏற்றுக் கொண்டு கெட்ட பெயரை வாங்கி இருக்காரு, இதுபோல தான் ஏதாவது ஒரு பிளாஷ்பேக் இருக்குன்னு எதிர்பார்க்கப்படுது. ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கும் சிறகடக்க ஆசை சீரியலின் ரசிகர்கள்.

Divyamayakannan

Recent Posts

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

17 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

30 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

56 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

3 மணத்தியாலங்கள் ago