விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல். விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது, ரீசன்டாக தகவல் வெளியாகி இருந்தது. குடும்ப கதைகளத்தோடு ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் இந்த சீரியலில் தற்போது முத்துவின் ஃப்ளாஷ்பேக் ஒளிபரப்பாக போகிறதாம். கடந்த சில நாட்களாகவே கிரிஷ் என்ற சிறுவனின் கதை தான் போய்க்கொண்டு இருக்கிறது. கிரிஷுக்கு பின்னாடி உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். வீட்டுக்குள்ளேயே கிரிஷ் அம்மாவை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள். கிரிஷ்க்கு பின்னாடி உள்ள முடிச்சுகள் அவிழ்ந்து விட்டால் என்ன நடக்கும். ரோகிணி நிலைமை? எல்லாத் தவறையும் செய்து கொண்டு முத்துவையும் மீனாவையும் கரிச்சி கொட்டிக் கொண்டு இருக்கும் ரோகிணி. ரோகினியின் உண்மை முகம் வெளியே வந்தால் விஜயா என்ன செய்வார்?
இந்த அனைத்து கேள்விகளுக்கும் போக போக தான் பதில் கிடைக்கும். கிரிஷ் செய்த தவறுக்காக முத்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். எந்த இடத்திலையுமே தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர் கிரிஷ்காக விட்டுக் கொடுத்துட்டாரு. நாளைக்கான ப்ரோமோ வெளிவந்தது. அதில் கிரிஷ் சீர்திருத்த பள்ளிக்கு போக வேண்டும் என்று மனோஜ் கூறினார். முத்து அதெல்லாம் முடியாது என்று பதில் சொன்னார். உன்ன மாதிரி அவனும் சீர்திருத்த பள்ளிக்கு போனா தான் கொஞ்சம் மாறுவான் அப்படின்னு மனோஜ் திமிராக பேசினார். கோபத்தின் உச்சிக்குப் போன முத்து மனோஜின் சட்டையை பிடித்துக் கொண்டு நான் ரவுடியாடா? நானாடா ரவுடி? என்று கேட்டுக்கொண்டே அடிக்க போனார். மனோஜ் எதையும் பேசவில்லை.
மீனா முத்துவிடம் நீங்க எதுக்கு சீர்திருத்த பள்ளிக்கு போனீங்க? என்று கேட்டார். முத்துவின் ஃப்ளாஷ்பேக், இந்த வாரத்திற்கான ப்ரோமோ. முத்து சிறுவயதில் இருக்கும் போது ஏதோ ஒரு காரணத்துக்காக விஜயா சாமியாரை பார்க்க போயிருக்காங்க. அந்த சாமியார் உங்களோட இரண்டாவது பையன் உங்க கூட இருந்தா உங்களோட உயிருக்கே ஆபத்து அப்படின்னு சொல்லி இருக்காரு. பயத்துல விஜயா அவரோட மாமியார் கிட்ட கொஞ்ச நாளைக்கு முத்துவ பாத்துக்கோங்க அப்படின்னு அழுது இருக்காங்க. முத்து அம்மா என்ன விட்டு போகாதீங்க அப்படின்னு கைய புடிச்சிட்டு கதறாரு. மனோஜ் செய்த தவறுக்கு முத்து பழியை ஏற்றுக் கொண்டு கெட்ட பெயரை வாங்கி இருக்காரு, இதுபோல தான் ஏதாவது ஒரு பிளாஷ்பேக் இருக்குன்னு எதிர்பார்க்கப்படுது. ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கும் சிறகடக்க ஆசை சீரியலின் ரசிகர்கள்.
