கோவில் வாசலில் அமர்ந்திருந்த எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு உணவு வழங்கச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, அந்தப் பெண் வைத்த கோரிக்கை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமக்கு உணவு வேண்டாம் என்றும், வறுமையின் காரணமாகத் தன் வயிற்றில் வளரும் குழந்தையைப் பரிசோதிக்க ‘ஸ்கேன்’ செய்யப் பணம் மட்டுமே வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் கேட்டுள்ளார். கணவர் உடனில்லாத நிலையில், இதுவரை ஒருமுறை கூட மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாத அந்தப் பெண்ணின் ஏழ்மை நிலை அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.
உடனடியாக அந்தப் பெண்ணைத் தனது வாகனத்தில் அழைத்துச் சென்ற அந்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் உரியப் பரிசோதனைகளைச் செய்து முடித்தார். குழந்தை நலமாக இருப்பதை அறிந்து நிம்மதியடைந்த அந்தப் பெண்ணிற்கு, ஒரு மாதத் தேவையான உணவுப் பொருட்களையும் கோடைக்காலத்திற்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டியையும் அவர் வழங்கினார். “இனி நீ என் பொறுப்பு” என்று கூறி அந்தப் பெண்ணைத் தத்தெடுத்த மனிதாபிமானச் செயல் குறித்த வீடியோ, தற்போது இணையத்தில் கோடிக்கணக்கான இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…