ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விசித்திரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது நபர் ஒருவர் தன்னுடைய மனைவி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளார். தன்னுடைய மனைவியை கூலி வேலை செய்து படிக்க வைத்ததாகவும், ஆனால் மனைவிக்கு அரசு பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தவுடன் அவர் தன்னோடு வாழ மறுத்துவிட்டதாகவும் நீதி கேட்டு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சலேம்பெர் குர்த் கிராமத்தில் வசிப்பவர் அனுப் குமார். இவர் பங்கஜகுமாரி என்ற பெண்ணை கடந்த 2021 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். தன்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்த பிறகு பங்கஜகுமாரி படித்து அரசு வேலை பெற விரும்பி இருக்கிறார்.
அவருடைய கனவை நிறைவேற்றுவதற்கு கணவர் அனுப் தன்னுடைய மனைவியை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இரவு பகலாக கூலி வேலை செய்து வந்துள்ளார் . ஆனால் அரசு வேலை கிடைத்த பிறகு மனைவி அனுப்பி குமாரோடு வாழ மறுத்து விட்டாராம். ஏனென்றால் அவர் ஒரு அரசு ஆசிரியர் கணவர் வேலை இல்லாமல் இருக்கிறார் என்பதற்காக வாம். இதுகுறித்து அனுப்குமார் கூறுகையில், திருமணத்திற்கு பிறகு நான் ஒரு கூலி தொழிலாளியாக இருந்தாலும் என் மனைவி பங்கஜகுமாரிக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற கனவு நனவாகவும், வீட்டின் நிதி நிலைமை மேம்படவும் அவளை படிக்க வைக்க நகரத்தில் ஒரு வாடகை அறையில் அவளை தங்க வைத்து போட்டிக்கு தயாராக பயிற்சி கொடுத்தேன்.
அவருடைய படிப்புக்கான அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக் கொண்டேன். ஆனால் 2023 ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அரசு பள்ளி ஆசிரியரானார். ஆனால் வேலை கிடைத்த பிறகு அவர் என்னோடு வாழ மறுத்துவிட்டார். அரசு வேலை கிடைத்தவுடன் அவருடைய நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…