தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடந்த ஊழல் புகார் தொடர்பாக நடந்த ரெய்டில் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் சிக்கினார்கள். இது போன்ற சம்பவம் தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடந்துள்ளது. ஆந்திராவில் கடந்த 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடந்தபோது மதுபான விற்பனையில் சுமார் 3500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனை கண்டறிந்து நடிகை ரம்பாவின் சகோதரர் வெங்கடேஸ்வர சீனிவாச ராவ் எஃப் ஐ ஆர் வழக்கு போட்டார்.
இவரோடு முகேஷ் குமார் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இந்த குழுவில் உள்ளனர். சில மாதங்களாக தீவிரமாக விசாரணை நடத்திய அதிகாரிகள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை அதிரடியாக கைது செய்தனர். எதிர் பல முக்கிய பிரபலங்கள் சிக்கிய நிலையில் சமீபத்தில் வெங்கடேஷ் நாயுடு கட்டு கட்டாக பணத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இப்படியான நிலையில் இந்த ஊழல் மோசடி வளையத்தில் நடிகை தமன்னாவின் பெயர் அடிப்படுகின்றது.
இந்த மோசடி பணத்தின் மூலமாக தமன்னா நடத்தி வரும் ஒயிட் அண்ட் கோல்ட் கம்பெனி கிட்டத்தட்ட 300 கிலோ தங்கம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெங்கடேஷ் நாயுடு உடன் தனி விமானத்தில் தமன்னா சென்ற புகைப்படங்கள் வைரல் ஆகியது. இதனால் இந்த மோசடியில் நடிகை தமன்னாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் பல அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் உட்பட திரை பிரபலங்களும் சிக்குவார்கள் என கூறப்படும் நிலையில் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…