3 நாள் சாம்பாரை சூடுபடுத்திய மனைவி, ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்… பெங்களூருவில் 27 வயது இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு… பின்னணியில் அதிர்ச்சி காரணம்…!!!

Spread the love

பெங்களூருவில் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறிய விவகாரத்தில் ஏற்பட்ட அற்பக் குடும்பத் தகராறு, 27 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த காவ்யா என்பவருக்கும் ரங்கசாமி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, நான்கு வயதில் ஒரு குழந்தை உள்ளது.

மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று, மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட சாம்பாரை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறியது தொடர்பாகத் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்தச் சாதாரண விவாதம் முற்றிய நிலையில், ரங்கசாமி தன் மனைவியைக் கடுமையான சொற்களால் நிந்தித்ததோடு, அவரைத் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கணவரின் இத்தகைய போக்கால் மனமுடைந்த காவ்யா, ஆத்திரத்திலும் வேதனையிலும் விவசாயப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததைக் கண்ட குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காவ்யாவின் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஒரு சிறிய சமையல் விவகாரம் தற்கொலை வரை சென்றதற்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago