அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தினமும் தான் தயார் செய்யும் மதிய உணவுக்காக தன்னுடைய கணவரிடம் நாள்தோறும் 1160 பணம் வசூலிப்பதாக கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், “என் கணவர் வேலைக்கு செல்லும்போது அவருக்கு மதிய உணவு சமைத்துக் கொடுக்கிறேன். அதற்காக ஒரு நாளைக்கு அவரிடம் இருந்து 1160 வசூலிக்கிறேன். அவர் வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு தான் கொடுக்கப் போகிறார்.
அதற்கு பதிலாக ஏன் எனக்கு தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரின் இந்த வீடியோ வைரல் ஆகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். துணையின் அன்புக்கும் சமையலுக்கும் விலை நிர்ணயிக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார்கள்.
