“ஒரே நாளில் முடிந்த 50 ஆண்டு கால பயணம்…!” சாவிலும் இணைபிரியாத தம்பதி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் 84 வயதான ஊறுகாய் வியாபாரி மீனாட்சி சுந்தரம், உடல்நலக் குறைவால் நேற்று அதிகாலை காலமானார். தனது கணவரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் மல்க அவர் உடல் அருகிலேயே அமர்ந்திருந்த 76 வயது மனைவி லட்சுமி, கணவரின் இறுதிச்சடங்கு வேலைகள் நடந்துகொண்டிருந்த போதே மதியம் திடீரென மயங்கி விழுந்து உயிர் துறந்தார்.

புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாழ்வில் ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த இந்தத் தம்பதியினர், சாவிலும் பிரியாமல் சில மணிநேர இடைவெளியிலேயே விண்ணுலகம் சென்றது உறவினர்களை உருக வைத்துள்ளது. ஒரே நாளில் மறைந்த தம்பதியினருக்கு ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் உடல்கள் ஒன்றாகவே நல்லடக்கம் செய்யப்பட்டன.