“இனி வாய் பேசவே முடியாது” மனைவியின் வெறிச்செயலால் நேர்ந்த விபரீதம்… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கணவர்…!!

By Soundarya on தை 20, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் மோடிநகரில், குடும்பத் தகராறின் போது கணவனின் நாக்கை மனைவி கத்தியால் துண்டித்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சய்புரி பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்பவருக்கும், அவரது மனைவி இஷாவுக்கும் இடையே திங்கள்கிழமை இரவு உணவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இஷா கத்தியால் விபினின் நாக்கைத் துண்டித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த விபின், மீரட்டில் உள்ள சுபார்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பேசும் வாய்ப்பு குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், குற்றம் சாட்டப்பட்ட பெண் இஷாவைப் பிடித்துக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணமான இத்தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.