பெரம்பூர் டூ திருச்சி…! விஜய்க்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை… டெபாசிட் வாங்கவே ‘இவ்வளவு’ ஓட்டு வேணுமா..?

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திமுகவின் வசம் உள்ள இந்த தொகுதிகளில் அவர் வெற்றி பெறுவாரா அல்லது குறைந்தபட்சம் டெபாசிட் தொகையையாவது தக்கவைத்துக் கொள்வாரா என்பது குறித்து பொதுமக்களிடையே பெரிய விவாதம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, ஒரு வேட்பாளர் தான் போட்டியிடும் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் 1 பங்கு (அதாவது 16.67%) வாக்குகளைப் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற முடியும்.

இந்த கணக்கீட்டின்படி, பெரம்பூர் தொகுதியில் சுமார் 2,26,296 வாக்காளர்கள் உள்ள நிலையில், 89.74% வாக்குப்பதிவு நடந்தால் மொத்தமாக 2,03,078 வாக்குகள் பதிவாகும். இதில் விஜய் டெபாசிட் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 33,853 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகிறது. அதேபோல, திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள 2,20,191 வாக்காளர்களில் 81.77% பேர் வாக்கு செலுத்தும் பட்சத்தில், பதிவாகும் 1,80,051 வாக்குகளில் 30,013 வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அங்கு அவரால் டெபாசிட்டை தக்கவைக்க முடியும்.

   

இருப்பினும், வெறும் டெபாசிட் வாக்குகளை மட்டும் பெறுவது வெற்றியை உறுதி செய்யாது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விஜய் தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், அவர் தலா 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற வேண்டியது கட்டாயமாகும். அவ்வாறு ஒரு லட்சம் வாக்குகளை எட்டினால் மட்டுமே, எந்தவிதமான கடும் போட்டியுமின்றி அவரால் எளிதாக வெற்றி கனியைப் பறிக்க முடியும் என்று அரசியல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.