“வைகோ வீட்டிலேயே விஜய்க்கு விழுந்த ஓட்டு”.. கேட்டதும் ஷாக் ஆன முதல்வர் விஜய்.. வைகோ சொன்ன ரகசியம்..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தனது வீட்டின் பணிப்பெண்களை விஜய்க்கு அறிமுகப்படுத்திய வைகோ, “இவர்கள் அனைவரும் உங்கள் கட்சியின் சின்னமான (விசில்) சின்னத்திற்கு ஓட்டுப் போட்டவர்கள்” என்று கலகலப்பாகக் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சந்திப்பின் போது எதிர்பாராத விதமாக ஒரு பணிப்பெண் விஜய்யின் காலில் விழ முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், “அய்யய்யோ அம்மா” எனக் கூறி பதற்றமடைந்தார். வைகோவின் வீட்டிலேயே மாற்றுக்கட்சியான விஜய்யின் கட்சிக்கு ஆதரவாளர்கள் இருப்பதை நெட்டிசன்கள் வியப்புடனும் நகைச்சுவையுடனும் பகிர்ந்து வருகின்றனர்.