தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹீரோ, வில்லன் என எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கும் நடிகர் சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து ரிலீசான வாரிசு திரைப்படத்தில் விஜயின் தந்தையாக நடித்து அசத்தியிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஆழி & தி ஸ்மைல் மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ருத்ரன், மழை பிடிக்காத மனிதன், நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பரம்பொருள். இயக்குனர் C.அரவிந்தராஜ் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பரதேசி கதாநாயகியாக நடித்துள்ள பரம்பொருள் திரைப்படத்தை கவி கிரியேஷன்ஸ் சார்பில் மனோஜ் மற்றும் கிரிஷ் தயாரித்துள்ளனர்.

S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்யும் பரம்பொருள் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் பரம்பொருள் திரைப்படத்தின் முதல் பாடலாக சிப்பர ரிப்பர எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து யுவன் மற்றும் அனிருத் காம்போவில் உருவான ‘அடியாத்தி’ என்ற பாடலின் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
