யார் கையில் அதிமுக..? “பறக்க வேண்டும் ஒரே சின்னக்கொடி” அதிமுக குழப்பத்திற்கு மத்தியில் ஜெயக்குமார் வெளியிட்ட வீடியோ… பரபரப்பில் தமிழகம்..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

அதிமுகவில் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமியைத் தலைவராக ஏற்கக்கோரி ஓ.எஸ். மணியன் தலைமையில் 17 எம்.எல்.ஏ-க்களும், அவருக்குப் போட்டியாக எஸ்.பி. வேலுமணியைத் தேர்ந்தெடுக்கக்கோரி சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏ-க்களும் தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இந்த மோதல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இருவேறு மனுக்கள் கட்சியினுள் நிலவும் அதிகாரப் போராட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இதை மறுத்துள்ளனர். கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்றும், சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

   

இத்தகைய குழப்பமான சூழலுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்த அவர், தனது இல்லத்தில் 60 அடி உயரத்தில் அதிமுக கொடி பறக்கும் காட்சியுடன், எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படப் பாடலான “பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி” என்ற வரிகளைப் பின்னணியாகச் சேர்த்துள்ளார். இது தொண்டர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகப் பார்க்கப்படுகிறது.