Connect with us

CINEMA

‘அவங்கள மட்டும் நாம மன்னிக்கவே கூடாது’….தமிழ்நாடு ஜோசியர்களை கடுமையாக விமர்சனம் செய்த எதிர்நீச்சல் குணசேகரன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில்  சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்த சீரியலை இயக்குனர் திரு செல்வமும் அவர்கள் இயக்கி வருகிறார்.

   

இந்த சீரியலில் கன்னிகா,  பிரியதர்ஷினி,  ஹரிப்பிரியா இசை,  மாரிமுத்து,  சத்திய பிரியா, கமலேஷ்,  கீர்த்தனா,  சுப்ரமணியன் போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.    இந்த சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் நடிகர் மாரிமுத்து.இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்.

சினிமா துறையில் சாதிக்க வேண்டும்  என்று தன் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்தார்.பின்னர் ராஜ்கிரண் இடம் உதவி இயக்குனராக இணைந்து அவரது படங்களில் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான், படங்களில் பணிபுரிந்தார். பாடல் ஆசிரியர் வைரமுத்துவிடம் இலக்கியம் வழியாக அறிமுகமானார்.

மாரிமுத்து பின்னர் மணிரத்தினம் ,வசந்த், சீமான், எஸ் ஜே சூர்யா போன்ற இயக்குனர்கள்  உட்பட பல திரைப்படகளில்  உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் .’யுத்தம் செய்’ என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதில் இவர் ஊழல் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

படத்தில் வெற்றிக்கு படத்திற்குப் பிறகு இவர் நிமிர்ந்து நில், கொம்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலுமே நடித்து வருகிறார். தற்போது இவர்  ஜோசியர்களை கடுமையாக விமர்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kollywood Cinima (@kollywoodcinima)

 

Continue Reading

More in CINEMA

To Top