தனுஷ் என்ன தாண்டி போனாலும் பிரச்சனை இல்ல.. எனக்கு இருக்கிற ஒரே பிரச்சனை இதுதான்.. பளிச்சின்னு சொன்ன சிம்பு..!!

By admin on ஆவணி 17, 2024

Spread the love

நடிகர் சிம்புவும் தனுஷும் சமகால நடிகர்கள். ஆனால் சிம்புவை காட்டிலும் தனுஷின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. ஆனால் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சிம்பு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனார்.

   

சிம்பு சில காலம் சினிமாவில் பிரேக் எடுத்து மாநாடு திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்களிலும் சிம்பு நடித்தார். அந்த படங்கள் மீண்டும் சிம்பு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. உடல் எடையை குறைத்து பழைய படியே சிம்பு வந்ததால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

   

 

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலும் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிம்பு கலந்து கொண்ட ஒரு போட்டியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்களும் தனுஷும் ஒரே நேரத்தில் தான் சினிமாவிற்கு வந்தீர்கள். உங்களை தாண்டி அவர் உயரமான இடத்திற்கு போய்விட்டார் என்ற எண்ணம் உள்ளதா? பொறாமை கிடையாது. அத பத்தி என்ன நினைக்கிறீங்க என்ன கேட்டுள்ளார்.

When Simbu spoke about his rivalry with Dhanush. On Throwback Thursday - India Today

அதற்கு பதில் அளித்த சிம்பு என்ன தாண்டி அவர் போயிட்டாருன்றது எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எனக்கு இருக்க ஒரே பிரச்சனை தான். அந்த டயலாக் தான் நியாபகம் வருது. ஃபர்ஸ்ட் யாரும் முன்னாடி போறாங்கிறது முக்கியம் இல்ல. லாஸ்ட்ல என்னங்கறது நமக்கு தெரியும். அப்பம் பாத்துக்கலாம் அப்படிங்கறதுதான் என கூறியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.