தன்னுடைய இறப்பு குறித்த அன்றே பேசிய நடிகர் டேனியல் பாலாஜி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram

Updated on:

பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு காக்க காக்க,  பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார்.

   

சித்தி, அலைகள் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு youtube சேனலுக்கு டேனியல் பாலாஜி அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கொரோனா காலகட்டம் உங்களுக்கு எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு பதில் அளித்த டேனியல் பாலாஜி, முதலில் ஜாலியாகத்தான் இருந்தது. நான் வீட்டில் தனியாக தான் இருந்தேன்.

அப்போது தெலுங்கு படத்தில் கமிட் ஆனதால் ஷூட்டிங் சென்று வந்தேன். எனக்கு கொரோனா வந்ததால் யாரிடமும் கூறாமல் மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். டாக்டர்கள் நான் நான்கு நாட்களில் இறந்து விடுவேன் நினைச்சாங்க. நான் 3 இல்ல 4 நாள்ல வீட்டுக்கு போயிடலாம்னு நினைச்சேன். டாக்டர் என்கிட்ட வந்து உங்களை கவனிக்க ஆள் இருக்காங்களா என கேட்டப்போ ஆமா இருக்காங்கன்னு சொல்லிட்டேன்.

22

ஆனா எனக்கு யாரும் இல்ல. நான் யார்கிட்டயும் சொல்லல. எப்படியோ  4 நாள்ல குணமாகி வீட்டுக்கு வந்துட்டேன். பிறப்பு மாதிரி தான் இறப்பும். நம்மளால கணிக்க முடியாது என பேசியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் நல்ல மனிதர் இறைவனிடம் சென்று விட்டார். தனது இறப்பை முன்கூட்டியே அறிந்திருப்பார் போல. அதனால் தான் இப்படி பேசுகிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

author avatar
Priya Ram