“விஜய் அரசை கவிழ்க்க ரகசிய சதி?”…. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியை விட்டு தூக்குங்க”… CM விஜய்க்கு அர்ஜுன் சம்பத் கொடுத்த பரபரப்பு எச்சரிக்கை….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

சாதி மற்றும் மத அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டு வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு எதிராகச் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்துக் காரசாரமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான ஆட்சியைச் சீர்குலைத்து கவிழ்ப்பதற்காகவே திமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து இரகசிய சதியில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அரசு நிர்வாகத்திற்கும் மாநிலத்தின் அமைதிக்கும் தொடர் இடையூறாகச் செயல்பட்டு வரும் விசிகவை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணியில் இருந்து முதல்வர் விஜய் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அர்ஜுன் சம்பத் கேட்டுக்கொண்டார். நாட்டின் நலனுக்கும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கும் இத்தகைய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது ஆட்சியின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர், வளர்ச்சிப் பாதையில் செல்லும் தமிழகத்திற்கு இத்தகைய பிரிவினைவாத மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தெரிவித்தார்.