FLASH: ஹார்மூஸ் நீரிணையிலிருந்து கடற்படையை விலக்குகிறது அமெரிக்கா..!!

By Soundarya on ஆனி 18, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உலகிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடல் வணிகப் பாதைகளில் ஒன்றான ஹார்மோஸ் நீரிணையிலிருந்து தனது கடற்படையை முழுமையாகத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவை வரவேற்றுள்ள ஈரான் அரசு, இன்னும் 60 நாட்களுக்குள் அனைத்து உலக நாடுகளின் வணிகக் கப்பல்களும் பயன்படுத்தும் வகையில் இந்த நீரிணை முழுமையாகத் திறந்துவிடப்படும் என்று உறுதியளித்துள்ளது. இந்த முக்கிய ஒப்பந்தத்தின் மூலம் இப்பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த போர் பதற்றம் தணிந்து, சர்வதேச கடல்வழி வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்து எவ்வித தடங்கலும் இன்றி சீராகும் என உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.