அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, “சுயபாதுகாப்பு” அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தெற்கு ஈரானின் முக்கியப் பகுதிகளில் இருந்த ரேடார் நிலையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டன. இதற்குப் பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதுடன், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இச்சம்பவத்தால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% வரை உயர்ந்து 93 டாலரைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
