அன்று நான் செய்த தவறு… பாரதிராஜாவின் இயக்கத்தில் விஜய் நடிக்காததற்கு இதுதான் காரணமா..? பல வருடங்களுக்குப் பின் வெளியான உண்மை…!!

Spread the love

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் விஜய்யை ஆரம்பகாலத்தில் நிராகரித்ததாக அவரே உருக்கமாகப் பேசிய பழைய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 84 வயதில் உடல்நலக்குறைவால் காலமான பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு அண்மையில் அரச மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் நடந்து முடிந்த நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து நினைவுகூர்ந்து வருகின்றனர். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தனது மகனை ஒரு கிராமத்துப் படத்தில் நடிக்க வைக்குமாறு பாரதிராஜாவிடம் கேட்டபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து அனுப்பிய நிகழ்வை இந்த வீடியோவில் பாரதிராஜா விவரித்துள்ளார்.

அந்தக் காணொளியில் பேசிய பாரதிராஜா, “எஸ்.ஏ. சந்திரசேகர் அவரது மகன் விஜய்யை என்னிடம் கூட்டிவந்து, உன்னுடைய கிராமத்துப் படத்தில் நடிக்க விஜய் ஆசைப்படுகிறான் எனக் கூறினார். ஆனால், அப்போது எனக்கு அந்தப் பையன் வேண்டாம் என்று தோன்றியது; நீயே உன் மகனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டியதுதானே என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். தான் அன்று செய்த தவறை ஒப்புக்கொண்ட பாரதிராஜா, அன்று தன்னால் நிராகரிக்கப்பட்ட விஜய், இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஹீரோவாக உயர்ந்திருப்பதை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நிராகரிப்பு குறித்து விஜய்யிடமே தான் நேரடியாகப் பேசியதாகவும் பாரதிராஜா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். “உன்னை அன்று நான் வேண்டாம் என்று அனுப்பிவிட்டேன்” என பாரதிராஜா கூறியதற்கு, விஜய் மிகவும் முதிர்ச்சியோடு, “நீங்கள் என்னை ரிஜெக்ட் செய்தது என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது” என்று பதிலளித்ததாக பாரதிராஜா உருக்கமாகப் பேசியுள்ளார். ஒரு மாபெரும் இயக்குநரின் நிராகரிப்பைத் தாண்டி, விஜய் இன்று அடைந்துள்ள இமாலய வளர்ச்சி அவரது ரசிகர்களால் இந்த வீடியோவின் மூலம் பெருமையோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

Swetha

Recent Posts

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

17 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

22 minutes ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

43 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

49 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

57 minutes ago