பிரபல நடிகரான தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இட்லி கடை திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியானி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
