ஸ்ரீ சத்யசாய் மாவட்டம், கதிரி நகரில் மூச்சுத்திணறல் காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கதிரியில் உள்ள ஒரு சச்சிவாலயத்தில் ஏ.என்.எம். செவிலியராகப் பணியாற்றி வந்த ஜோதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது கணவர் கோபால் நாயக் அதே சுகாதாரத் துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று திடீரென ஜோதிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருவுற்றிருந்த மனைவியும், பிறக்கவிருந்த குழந்தையும் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தது குடும்பத்தினரையும் சக ஊழியர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சுகாதாரத்துறையில் பணியாற்றும் தம்பதியருக்கு நேர்ந்த இந்த திடீர் பேரிடர் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…