பள்ளிக் சிறுவன் பிரஜ்வல் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலஹங்கா விநாயகாநகரைச் சேர்ந்த 13 வயது பிரஜ்வல், 8ஆம் வகுப்பு படித்து வந்தான். “அப்பா, அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள், தாமதிக்காதீர்கள்” என்று அச்சிறுவன் பேசிய வார்த்தைகள், உண்மையில் அவனது சொந்தக் கொலைக்கான கொடூரமானத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
தன்னை வைத்து ஒரு ‘பிராங்க்’ வீடியோ எடுக்கப்படுவதாகவே அந்தச் சிறுவன் நம்பியிருந்தான். ஆனால், கொடூர மனம்படைத்த அந்தப் பாதகர்கள், சிறுவனின் பெற்றோரிடம் இருந்து ரூ 1 கோடி தொகையைப் பறிப்பதற்காக ஒரு போலி கடத்தல் காட்சியை ஒத்திகை பார்த்துப் பதிவு செய்து கொண்டிருந்தனர் என்பதே கசப்பான உண்மையாகும்.
சிறுவன் கொஞ்சமும் சந்தேகப்படாமல் அவர்கள் கூறியதை நம்பி நடித்துக் கொடுத்த நிலையில், அந்த ஒத்திகைக்குப் பிறகு கொடூரிக் கும்பல் அவனைப் படுகொலை செய்தது. குறும்புத்தனமான வீடியோ என்று நினைத்துச் சிறுவன் பேசிய வார்த்தைகளே, அவனது உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
