புனேயில் ஒரு தாய் உறக்கத்தின் போது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் திரும்பிய போது, தன் 8 வயது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனேயின் ஹடாப்சர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த சிறுமி மைராபி தனது தாயுடன் அருகருகே தூங்கிக் கொண்டிருந்தாள்.
மேலும் அதிகாலையில் தாய் விழித்துப் பார்த்தபோது, சிறுமியின் கழுத்து மற்றும் உடலில் கடுமையான காயங்கள் இருந்ததோடு, படுக்கை முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்ம மரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட தகவல்களின்படி, யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், தாய் அருகிலேயே இருந்தும் எப்படி இந்தத் தாக்குதல் நடந்தது என்பது குறித்து குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமியின் மரணத்திற்கான தெளிவான காரணமும், கொலையாளி யார் என்பதும் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ள
