அபேஸ்…! ரூ.2.5 கோடி கொள்ளை… வாட்ஸ்அப் காலில் நடந்த பயங்கரம்… வீட்டை விற்க வைத்த கம்போடியா கும்பல்… மிரண்டுபோன மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான விபா என்பவரை, கம்போடியாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.2.48 கோடி பணத்தை ஈவு இரக்கமின்றி பறித்துள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு தொலைபேசியில் மிரட்டிய அந்த கும்பல், மூதாட்டியின் எண் மனிதக் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி அவரை 22 நாட்கள் வாட்ஸ்அப் வீடியோ காலில் மிரட்டி சிறைபிடித்தனர். அந்த பயத்தில் இருந்த மூதாட்டியை கட்டாயப்படுத்தி அவரது வீட்டை விற்கச் செய்தும், நகைகளை அடகு வைக்கச் செய்தும் மற்றும் வங்கிக் கணக்கிலிருந்த சேமிப்பு என அனைத்தையும் அந்த கும்பல் அபகரித்துள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் குறித்து மூதாட்டியின் மகள் டெல்லி காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், குற்றவாளிகள் வெளிநாட்டில் இருந்து இந்த சதி வலையை இயக்குவதால் போலீஸ் விசாரணையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனையடுத்து, முறையான மற்றும் விரைவான விசாரணைக்காக இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றக் கோரி பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடி மனு தாக்கல் செய்துள்ளனர்.