Director Venky Atluri

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த 46வது படம்…. டைட்டில் இதுதான் – மகா சிவராத்திரி அன்று வெளியாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு!

By Elango on மாசி 2, 2026

Spread the love

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தை தொடர்ந்து 9 மாதங்களாக அவரது படம் எதுவும் வெளியாகவில்லை. வருகிற 19ம் தேதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படம் வெளியாக வாய்ப்புள்ளது. அதே போல் நடிகர் சூர்யா நடிகை மமிதா பைஜூ நடித்த சூர்யாவின் 46வது படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கபடவில்லை. வருகிற 15ம் தேதி மகா சிவராத்திரி நாளில் இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி போன்ற ஒரு கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.