Connect with us

வெளியான அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்.. நா முழுநேர ஹீரோன்னு சொல்லிட்டு இப்படியா பேரு வைக்கிறது..

CINEMA

வெளியான அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்.. நா முழுநேர ஹீரோன்னு சொல்லிட்டு இப்படியா பேரு வைக்கிறது..

 

கார்த்திக் யோகி இயக்கத்தில் டிஜி விஸ்வ பிரசாத் அவர்களின் தயாரிப்பில் சீன் ரோல்டன் இசை அமைப்பில் சந்தானம் அவர்கள் நடிப்பில் உருவாகி பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய படம் தான் “வடகப்பட்டி ராமசாமி”. சந்தானம் அவர்களுக்கு கிட்டத்தட்ட சில காலமாக படங்கள் எதுவும் பெரிதாக போகவில்லை.

ஆனால் கடந்த இரண்டு படங்கள் அவருக்கு பெரும் பெயரை வாங்கித் தந்தது, டிடி ரிட்டன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, இது போன்ற படங்கள் அவருக்கு மீண்டும் கம்பேக்காக அமைந்தது, அதனை தொடர்ந்து தற்போது சந்தானம் அவர்கள் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார், அதில் அதிகமாக காமெடி ஆக்சன் டிராமா கதையாக தான் அமைகிறது. அதைப்போல் தற்போதைய சந்தானத்தின் அடுத்த படத்திற்கான அஃபீஷியல் அனௌன்ஸ் வந்துள்ளது,

   

“ஆனந்த்” அவர்களின் இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் ஜி.என் அன்புச் செழியன் அவர்களின் மகள் “சுமித்ரா அன்பு செழியன்” தயாரித்து இப்படம் வெளியாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள், “சந்தானம்” மற்றும் அவர்களுடன் இணைந்து ஜோடியாக “பிரியாலயா” அவர்கள் இணைந்துள்ளார்கள். இப்படத்தில் கிராமத்துப் படங்களுக்கு ஏற்ற பாடல்களை அமைக்கும் கிராமத்துக்காரன் என்று பெயரை வாங்கிய இசை அமைப்பாளர் டி இமான் இப்படத்தில் இசை அமைக்க உள்ளார்.

தற்போது இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக்கையும், டைட்டிலையும் கோபுரம் பிலிம்ஸ் ஸ்டுடியோ அஃபிஷியல் ஆக வெளியிட்டு இருக்கிறார்கள், சந்தானம் நடிக்கும் இப்படத்தின் பெயர் “இங்கு நான் தான் கிங்” என்ற தலைப்பில் ஃபர்ஸ்ட் லுடன் வெளியிட்டு இருக்கிறார்கள். இதைக் கண்ட ரசிகர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள், மற்ற சிலர் இப்படத்தின் பெயரை என்னடா பெயர் வைத்திருக்கிங்க என்று சொல்லி கலாய்த்து வருகிறார்கள். இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்களை கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Gopuram Films (@gopuramfilmsofficial)

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top