மேற்கு வங்கத்தின் பக்ஸா புலிகள் காப்பகத்தில் மூன்று வயது நிரம்பிய ‘டி138’ என்ற பெண் புலி வெற்றிகரமாக வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இக்காப்பகத்திற்குக் கொண்டுவரப்பட்ட இந்த புலி, வனப்பகுதிக்கு முழுமையாகச் செல்வதற்கு முன் தொடக்கத்தில் ஒரு தற்காலிக அடைப்பிடத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்காலிக அடைப்பிடத்தில் வைக்கப்பட்டிருந்த அப்பெண் புலி, ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் அதைத் தாண்டி பரந்த பெரிய வனப்பகுதிக்குள் சுயமாகச் சென்றடைந்தது. புலி பாதுகாப்பாகக் காட்டுக்குள் நுழைந்ததை அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
https://twitter.com/PTI_News/status/2107070447275901089/video/1
பக்ஸா புலிகள் காப்பகத்தில் அழிந்துவரும் புலி இனத்தைப் பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தி மீட்டெடுக்கவும் வனத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கியப் பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த இடமாற்ற நடவடிக்கை அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
