5 years of 96… 96 பட வீடியோவை வெளியிட்டு ஜானு என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா…? வைரலாகும் பதிவு…!

By Begam on ஐப்பசி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இடையில் இவரது கேரியர் கொஞ்சம் டல் ஆனது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

   

இத்திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவின் மார்க்கெட் எகிறியுள்ளது என்று கூறலாம். இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

   

 

இப்படி பிசியாக பல படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்த 96 படத்தை யாரும் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள். 96 ஜானுவாக நடிகை திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘5 glorious year , Thank you Prem’ எனக்கூறி 96 பட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)