ராஜஸ்தானில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலனை சந்தித்து திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்த 37 வயது பெண் ஒருவர் 600 கி.மீ தூரம் காரில் சென்றபோது, அந்த நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார். மறுநாள், அவரது காருக்குள் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது காதலரான பள்ளி ஆசிரியரை இரும்பு கம்பியால் கொலை செய்ததாக தற்போது கைது செய்துள்ளனர். இறந்தவர் முகேஷ் குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் ஜுன்ஜுனுவில் அங்கன்வாடி மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். முகேஷ் குமாரி தனது கணவரிடமிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டார்.
இதனையடுத்து பள்ளி ஆசிரியரான மனாரத்துடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டார். இருவரும் சந்திக்கத் தொடங்கி படிப்படியாக நெருக்கமாகிவிட்டனர். முகேஷ் அடிக்கடி ஜுன்ஜுனுவிலிருந்து பார்மருக்கு காரில் சென்று, சுமார் 600 கி.மீ தூரம் பயணித்து, மனாரமை சந்திப்பார். அவரது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். முகேஷ், மணாரத்தை திருமணத்தை தொடருமாறு அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், இதனால் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பர் 10 ஆம் தேதி, முகேஷ் தனது ஆல்டோ காரை ஜுன்ஜுனுவிலிருந்து பார்மரில் உள்ள மனாராமின் வீட்டிற்கு சென்று தங்கள் உறவு குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார், இது அவரை கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்த விஷயத்தைப் பற்றி தனியாகப் பேசுவோம் என்று மனாராம் முகேஷிடம் கூறினார். அன்று மாலை, இருவரும் தனியாக இருந்தபோது, மனாராம் ஒரு இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கி, கொலை செய்து அவரது உடலை அவரது காரின் ஓட்டுநர் இருக்கையில் வைத்து, அதை ஒரு விபத்து போலக் காடடியுள்ளார் . இந்த சம்பவத்தில் தற்போது காதலன் மனாராம் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…