“ஆட்டைய” போட போன இடத்தில் “ஓட்டையால்” சிக்கிய திருடன்… கலகலப்பு பட பாணியில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

கோட்டா நகரின் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவரது குடும்பத்தினர், ஜனவரி 3-ம் தேதி காட்டு ஷியாம் ஜி (Khatu Shyam Ji) கோயிலுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது, சமையலறையின் எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரத்தில் நபர் ஒருவர் தலைகீழாகச் சிக்கியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிக்கிக்கொண்ட நபர் பவன் வைஷ்ணவ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தத் துவாரத்தின் வழியாக வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, பாதியிலேயே உடல் மாட்டிக்கொண்டு நகர முடியாமல் சிக்கியுள்ளார்.

 

   
View this post on Instagram

 

A post shared by The Vaani (@thevaani.in)

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போர் கேடா (Borkheda) பகுதி போலீஸார் அங்கு வந்து அந்தத் திருடனை பத்திரமாக மீட்டுக் கைது செய்தனர். விசாரணையில், இவருடன் வந்த மற்றொரு கூட்டாளி தப்பியோடியது தெரியவந்தது.  இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது